Wednesday, July 23, 2008

ஒரு நல்ல நண்பனிடம் நீ எதிர்பார்க்கும் பண்புகள்



நட்பு என்பது இவ்வுலகில் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். காரணம், நட்பு இல்லாமல் ஒருவர் மற்றோருவரை நன்றாகப் புரிந்துக்கொண்டு ஒன்று கூடி வேலை செய்ய இயலாது. வேலைக்குப் போகும் போது மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு வேலையைச் செய்ய வேண்டிய சூழல் அமையும். அப்போது, நாம் மற்ற இனத்தவர்களை நன்றாகச் தெரிந்துகொள்ளும் வண்ணம் நட்பை வளர்த்துக்கொண்டால், நிச்சயமாக நாம் அடையவேண்டிய குறிக்கோள்களை எளிதில் அடையலாம் .

ஒரு நல்ல நண்பனிடம் நான் எதிர்பார்க்கும் பண்புகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஒரு நல்ல நண்பனிடம் இருக்க வேண்டி பண்புகளில் முக்கியமானவை சகிப்புத் தன்மை, நல்ல அறிவு , நேர்மை போன்றவையாகும் . ஒரு நல்ல நட்பில் நேர்மை மிகவும் முக்கியம் . ஒரு நண்பன் தன் மற்ற நண்பனுடன் நேர்மையுடன் நடந்துககொள்ளவில்லை என்றால் எது உண்மை? எது பொய்? என்று அந்நண்பனுக்குத் தெரியாது? ஆகையால், மெய்யில்லாத நட்பு உண்மையான நட்பில்லை என்று நான் கருதுகிறேன் .

ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வது பழங்காலத் தமிழர்களின் பண்பு. அதனால், அப்பண்பைப் போற்றித் தன்னை நாடி வருவோருக்குத் தன்னால் செய்ய முடிந்த அளவிற்கு உதவி செய்வோரையே மற்றவர்கள் விரும்புவார்கள். ஆகையால் , மற்றவர்களுக்கு உதவும் நற்பண்பை ஒரு நல்ல நண்பன் கடைப்பிடிக்கவேண்டும். நல்ல நண்பர்கள் இருவரும் நகமும் சதையுமாக வாழ வேண்டும். மேலும், அவர்களிடையே விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, ஒரு பாடத்தைப் பற்றியோ செய்தியைப் பற்றியோ இருவருக்கும் எதிரான எண்ணங்ள் தோன்றினால், தன் எண்ணம் தான் சிறந்தது என்று கூறாமல் தன் நண்பனுடைய எண்ணத்தின் நியாயத்தை கேட்க வேண்டும்.

ஒரு நல்ல நண்பனிடம் சிந்தித்துச் செயல்களைச் செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும். செய்யும் செயல்களை சிறப்பாகச் செய்து வெற்றி அடையும் பண்பும் இருக்க வேண்டும். தவறான எண்ணங்களைக் கொள்ளாமலும் தகாத வழியில் செல்லாமலும் இருக்கும் அளவிற்கு ஒரு நல்ல நண்பன் வேண்டும் .

இவ்வாறு பல்வேறு நல்ல பண்புகளையும் அறநெறிகளையும் போற்றி வாழ்பவரே ஒரு நல்ல நண்பனாக விளங்குவார்.

1 comment:

நெய்தல் said...

நல்ல முயற்சி! பாராட்டுகள்!
பிழைகளில் கவனம் செலுத்தலாம். இடையிடையே இனிய தொடர்களைப் பயன்படுத்தினால் கட்டுரை இன்னும் சிறப்பாக இருக்கும்.

அன்புடன்
ஆசிரியர்